சமையலறை

உலர் பழ அவல் உருண்டை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

அவல் - அரை கப்

அத்திப் பழம் 2 (உலர்ந்தது)

ஆப்பிள் பாதி

உலர்ந்த திராட்சை ஒரு கைப்பிடி

பேரீச்சம் பழம் 2

தேங்காய்த் துருவல் அரை கப்

வெல்லம் துருவியது - கால் கப்

வெள்ளை எள் - சிறிதளவு

நெய் 1 டீஸ்பூன்

ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

அத்திப் பழம், ஆப்பிள், உலர் திராட்சை, பேரீச்சை இவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். அவலைத் தண்ணீரில் கொட்டி, உடனே பிழிந்தெடுக்கவும். நறுக்கிய பழங்கள், நனைத்த அவல் இவற்றுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள், எள், நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும். குழந்தைகளுக்கு உகந்த நொறுக்குத் தீனி இது.

ராஜபுஷ்பம்

SCROLL FOR NEXT