சமையலறை

சுரைக்காய் துவையல்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பிஞ்சு சுரைக்காய் - 1

வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் - 4

சீரகம், தனியாத் தூள் - தலா அரை டீஸ்பூன்

தக்காளி - 2

கறிவேப்பிலை - 50 கிராம்

பொட்டுக் கடலை, வெள்ளை எள் - தலா 2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சுரைக்காயைத் தோல் நீக்கி, துருவிக்கொள்ளவும். சுரைக்காய்த் துருவலைச் சிறிது எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி வைக்கவும். எள்ளை வறுத்து, பொட்டுக் கடலையோடு சேர்த்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, கிள்ளிய காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு தனியாத் தூள், வதக்கி வைத்திருக்கும் சுரைக்காய்த் துருவலைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். அரை டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேகவிட வேண்டும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு லேசாக அரைக்கவும்.

பொடித்து வைத்திருக்கும் எள்-பொட்டுக்கடலைக் கலவையை அதனுடன் கலக்கவும். இந்தத் துவையலை இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

SCROLL FOR NEXT