காக்கடி டால் மசாலா
என்னென்ன தேவை?
பிஞ்சு வெள்ளரிக்காய் - 3
பாசிப் பருப்பு - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
கிராம்பு - 2
பட்டை - சிறு துண்டு
அன்னாசிப் பூ, பிரிஞ்சி இலை - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெள்ளரிக்காயையும் வெங்காயத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கவும். பாசிப் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, அன்னாசிப் பூ, பிரிஞ்சி இலை போட்டு வதக்கி பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு வெள்ளரிக்காயைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிய பாசிப் பருப்பைச் சேர்த்து மூடி வைக்கவும்.
சூட்டில் எல்லாம் சேர்ந்து வெந்துவிடும். கமகமவென்று மணக்கும் இந்த வெள்ளரிக்காய் பாசிப்பருப்பு மசாலாவை, சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். வெயிலுக்குக் குளுமை தரும் வெள்ளரிக்காய், வெங்காயம், பாசிப் பருப்பு இவற்றைச் சேர்ப்பதால் இந்தக் காக்கடி டால் மசாலாவை செய்வது சுலபம், சுவையோ அதிகம்.