சமையலறை

வெங்காய கடைசல்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பொடியான சின்ன வெங்காயம் - 1 கிலோ

பச்சை மிளகாய் - 10

சீரகம் - 1 டீஸ்பூன்

தனியா - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

வெல்லம், புளி - 50 கிராம்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெங்காயத்தைத் தோலுரித்து, கழுவி வைக்கவும். முதல் நாள் இரவே மண் சட்டியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், தனியா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கியதும் புளிக் கரைசலை ஊற்றவும். அதனுடன் வெல்லம், தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்தவுடன் மூடி வைத்துவிட வேண்டும்.

மறுநாள் காலை இதை மறுபடியும் கொதிக்க வைத்து மத்தால் நன்றாகக் கடைய வேண்டும். இது ஒரு வாரத்துக்கும் மேலாகக் கெடாமல் இருக்கும். மண் சட்டியில் கடையும் இந்தக் கடைசலை இட்லி, தயிர் சேர்த்த கம்புச் சோறு, ராகிக் களி இவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம். பாரம்பரியம் நிறைந்த கிராமத்து உணவு இது.

SCROLL FOR NEXT