என்னென்ன தேவை?
சோளம் - கால் கிலோ
பச்சைப் பயறு - 150 கிராம்
முருங்கைக் கீரை, தேங்காய்த் துருவல் - தலா 1 கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு, கடலைப் பருப்பு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சோளத்தை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பச்சைப் பயறை முக்கால் மணி நேரம் ஊறவைக்கவும். இரண்டும் நன்றாக ஊறியதும் இவற்றுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து, குருணையாக அரைக்கவும். எடுக்கும்போது தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு முருங்கைக் கீரையைச் சேர்த்து வதக்கவும். கீரை லேசாக வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் சோள மாவு கலவையைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கீரை மாவுடன் நன்றாகக் கலக்கும்வரை கிளறிவிட வேண்டும்.
கை பொறுக்கும் பதத்துக்கு மாவு ஆறியதும் கொழுக்கட்டையாகப் பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள்கூடச் சுவையும் சத்தும் நிறைந்த இந்தச் சோளக் கொழுக்கட்டையை விரும்பிச் சுவைப்பார்கள்.