சமையலறை

கடாரங்காய் ஊறுகாய்

செய்திப்பிரிவு

கடாரங்காய் ஊறுகாய்

என்னென்ன தேவை?

கடாரங்காய் - 1

மிளகாய்த் தூள் - 6 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - அரை கப்

பெருங்காயம் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கடாரங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அதில் மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம், எண்ணெய் சேர்த்து வதக்கி, பதமானதும் எடுக்கவும்.

கடாரங்காயை உப்பில் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது உபயோகித்துக் கொள்ளலாம்.

SCROLL FOR NEXT