சமையலறை

ஓமப்பொடி வடாம்

செய்திப்பிரிவு

ஓமப்பொடி வடாம்

என்னென்ன தேவை?

பதப்படுத்திய பச்சரிசி - 4 கப்

ஜவ்வரிசி - 100 கிராம்

பச்சை மிளகாய் - 6

எலுமிச்சை - 1

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பச்சரியுடன் ஜவ்வரிசியைச் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 3 டம்ளர் தண்ணீரைக் கொதிக்க விடவும். மிளகாயுடன் உப்பு சேர்த்து அரைத்து, கொதிக்கும் தண்ணீரில் ஊற்றவும். மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, இறக்கிவிடவும். கைபொறுக்கும் சூட்டில் மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு, மெல்லிய பருத்தித் துண்டில் பிழியவும். இரண்டு அல்லது மூன்று நாட்களில் நன்றாகக் காய்ந்துவிடும்.

SCROLL FOR NEXT