சமையலறை

புதினா ஜல் ஜீரா பானி

செய்திப்பிரிவு

புதினா ஜல் ஜீரா பானி

என்னென்ன தேவை?

புதினா - 1 கைப்பிடி

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

வெல்லம் - சிறிய துண்டு

சீரகத் தூள் - கால் டீஸ்பூன்

எலுமிச்சை, அத்திப் பழம் - தலா 1

பெருங்காயம், கரம் மசாலா - தலா 1 சிட்டிகை

இஞ்சி - சிறு துண்டு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அத்திப் பழம், பெருங்காயம், சீரகத் தூள், கரம் மசாலா, புதினா இவற்றுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி அதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துப் பரிமாறவும். விரும்பினால் சோடா சேர்த்தும் பருகலாம். இதை ஒரு நாள் மட்டும் ஃப்ரிட்ஜில் வைத்துப் பருகலாம்.

SCROLL FOR NEXT