நன்னாரி சர்பத்
என்னென்ன தேவை?
நன்னாரி வேர் - 100 கிராம்
எலுமிச்சைச் சாறு - 50 மி.லி
பார்லி - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - முக்கால் கிலோ
தண்ணீர் - 350 மிலி
லெமன் யெல்லோ கலர் - சிறிதளவு
லெமன் எசென்ஸ் - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
தண்ணீரில் நன்னாரி வேர், பார்லி இவற்றைச் சேர்த்துக் கொதிக்க விடவும். வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். ஆறியதும் ஃபுட் கலர், எசென்ஸ் சேர்த்து, உலர்வான பாட்டிலில் அடைக்கவும். தேவைப்படும் போது முக்கால் பங்கு தண்ணீருடன் கால் பங்கு ஜூஸ் சேர்த்துப் பருகலாம்.