சமையலறை

வடுமாங்காய்

செய்திப்பிரிவு

வடுமாங்காய்

என்னென்ன தேவை?

வடுமாங்காய் - 3 கப்

மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

விளக்கெண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு,

எப்படிச் செய்வது?

வடுமாங்காயைக் கழுவி, துணியால் ஈரம் போகத் துடைத்து, விளக்கெண்ணெய் தடவி வைக்கவும். இதனுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து நன்கு கலந்து பீங்கான் ஜாடி அல்லது கல்சட்டியில் போட்டு மூடவும். தினமும் நன்றாகக் குலுக்கி விடவும். சில நாட்களிலேயே நன்றாக ஊறிவிடும். தேவையான போது மரக்கரண்டியால் எடுத்துப் பரிமாறவும்.

SCROLL FOR NEXT