சமையலறை

மலபார் அவியல்

செய்திப்பிரிவு

மலபார் அவியல்

என்னென்ன தேவை?

கேரட், வெள்ளைப் பூசணி, காராமணி, முருங்கைக்காய், மலபார் சேனை (வெளுப்பாக இருக்கும், சீக்கிரத்தில் வேகும்) பெங்களூரு கத்தரிக்காய் (சௌ சௌ) - எல்லாம் சேர்த்து - அரைக் கிலோ

முற்றிய தேங்காய் - 1

பச்சை மிளாகய் - 6

சீரகம் - அரை டீஸ்பூன்

தயிர் - 2 கப்

தேங்காய் எண்ணெய் - 50 கிராம் கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காய் வகைகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, வடிக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றை விழுதாக அரைத்து, தயிரில் கலக்கவும். காய்கறிகளுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கிவிடவும். அடுப்பில் வைத்து லேசாகச் சூடாக்கி இறக்கி கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

SCROLL FOR NEXT