குலாபி சிந்தடிக் சிரப்
என்னென்ன தேவை?
பன்னீர் ரோஸ் - 100 கிராம்
சர்க்கரை - 1 கிலோ
தண்ணீர் - அரை லிட்டர்
சிட்ரிக் அமிலம் - அரை டீஸ்பூன்
ரோஸ் கலர் - சிறிதளவு
ரோஸ் எசென்ஸ் - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். சிட்ரிக் அமிலம் சேர்த்து இறக்கவும். உடனே பன்னீர் ரோஸ் இதழ்களைச் சேர்க்கவும். ஆறியதும் ஃபுட் கலர், எசென்ஸ் சேர்த்து, உலர்வான பாட்டிலில் அடைத்து வைக்கவும். முக்கால் டம்ளர் பால் அல்லது தண்ணீரில் 2 டேபிள் ஸ்பூன் குலாபி சிரப் சேர்த்துப் பருகலாம்.