சமையலறை

மினி இட்லி சீயாலி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

மினி இட்லி - 1 தட்டில் வேகவைத்தது

பச்சை மிளகாய் - 1

ரசப்பொடி - 1 டீஸ்பூன்

சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய மல்லித் தழை - 2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு -தாளிக்க

முந்திரிப் பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சோள மாவுடன் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நீர்க்கக் கரைக்கவும். வேகவைத்த மினி இட்லியை அதில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பொரித்து வைத்திருக்கும் இட்லியைச் சேர்த்து வதக்கி, ரசப்பொடி தூவி, கிளறவும். கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

SCROLL FOR NEXT