சமையலறை

பச்சைப் பட்டாணி சூப்

செய்திப்பிரிவு

பச்சைப் பட்டாணி சூப்

என்னென்ன தேவை?

பச்சைப் பட்டாணி - 1 கப்

பூண்டு - 2 பல்

பட்டை - சிறு துண்டு

லவங்கம் - 2

ஏலக்காய் - 1

மிளகுப்பொடி - கால் டீஸ்பூன்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 1 சிட்டிகை

சோளமாவு - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பட்டை, லவங்கம், ஏலக்காய் இவற்றை மெல்லிய வெள்ளைத் துணியில் முடிந்துவைக்கவும். பச்சைப் பட்டாணியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் இந்த மசாலா முடிச்சைப் போட்டு குக்கரில் மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். சூடு அடங்கியதும் மசாலா முடிச்சை எடுத்துவிட்டு பட்டாணியை அது வேகவிடப்பட்ட நீருடன் சேர்த்து மசிக்கவும். அதில் 1 கப் வெந்நீர் சேர்த்து கலக்கி வடிகட்டவும். சோள மாவை கால் கப் நீரில் கரைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயைச் சேர்த்து உருக்கவும். அதில் சோள மாவு, பட்டாணிக் கரைசல் ஆகியவற்றைச் சேர்க்கவும். கொதித்ததும் சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும். விரும்பினால் சிறிது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

லட்சுமி சீனிவாசன்

SCROLL FOR NEXT