சமையலறை

அறுசுவை அமெரிக்கா: குடமிளகாய் சட்னி

செய்திப்பிரிவு

குடமிளகாய் சட்னி

என்னென்ன தேவை?

சிவப்பு குடமிளகாய், வெங்காயம், தக்காளி- தலா 1

காய்ந்த மிளகாய் - 2

புளி - நெல்லிக்காய் அளவு

கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

உப்பு ,எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். தக்காளி சேர்த்து சிறிது நேரம் கிளறி, தேவையான அளவு உப்பு, குடமிளகாய் சேர்த்து நன்கு கிளறவும். மிளகாய் நன்றாக வெந்ததும் புளியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இந்த சட்னியை சிவப்பு குடமிளகாயில் செய்தால்தான் சுவையாக இருக்கும். இட்லி,தோசை போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம் .

SCROLL FOR NEXT