என்னென்ன தேவை?
இட்லி மாவு - 2 கப்
உருவிய முருங்கைக் கீரை - 1 கப்
உடைத்த முந்திரித் துண்டுகள், ரஸ்க் தூள் - தலா 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு, உளுந்து - தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். அதில் முந்திரி, உளுந்து இவற்றைச் சேர்த்து வறுக்கவும். நறுக்கிய முருங்கைக் கீரையைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த் தூள், ரஸ்க் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, சிறிதளவு உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும். இந்தக் கலவை ஆறியதும் இட்லி மாவில் கலக்கவும். பணியாரக் கல்லை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் குழிகளில் எண்ணெய் ஊற்றி, கரைத்து வைத்திருக்கும் மாவை அதில் ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
ராஜகுமாரி