சமையலறை

அகத்திக் கீரை சாம்பார்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

நறுக்கிய அகத்திக் கீரை - 1 கப்

வேகவைத்த துவரம் பருப்பு - கால் கப்

புளி - நெல்லிக்காய் அளவு

சின்ன வெங்காயம் - 6

சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 1

உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அடி கனமான பாத்திரத்தில் புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். 1 கொதி வந்ததும் நறுக்கிய கீரையைச் சேர்க்கவும். வெங்காயத்தைத் தனியாக ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கிச் சேர்க்கவும். கீரை நன்றாக வெந்ததும், வேகவைத்திருக்கும் துவரம் பருப்பை ஊற்றி கொதிக்க விடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். இதைக் கொதிக்கும் சாம்பாரில் கொட்டிக் கலந்து, இறக்கிவைக்கவும். இந்த அகத்திக் கீரை சாம்பாரை சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

ராஜகுமாரி

SCROLL FOR NEXT