பேபி ஆனியன் ரைஸ்
என்னென்ன தேவை?
அரிசி, சின்ன வெங்காயம் - தலா கால் கிலோ
பட்டை - சிறு துண்டு
லவங்கம், ஏலக்காய் - தலா 2
காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2
நெய் - 50 கிராம்
மிளகுப் பொடி - கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசியை, உதிரி உதிரியான சாதமாக வடிக்கவும். வாணலியில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வடித்த சாதத்தை அதில் சேர்த்துக் கிளறி, மிளகுப் பொடி தூவி பரிமாறவும். வெங்காயத்தின் அளவு அதிகமாக இருப்பதால் சுவை அருமையாக இருக்கும்.
லட்சுமி சீனிவாசன்