என்னென்ன தேவை?
உளுந்து - 1 கப்
நறுக்கிய பசலைக் கீரை - அரை கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
எப்படிச் செய்வது?
உளுந்தை முக்கால் மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அதிக மிருதுவாக இல்லாமல் சற்றுக் கொரகொரப்புடன் இருக்கும்படி அரைக்கவும். அரைத்த மாவில் பெருங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய பசலைக் கீரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும். அடுப்பை சிம்மில் வைத்தால், உள்பக்கம் நன்றாக வெந்துவிடும். விரும்பினால் மாவில் 1 சிட்டிகை மிளகுத் தூள் சேர்க்கலாம்.
கீரை சமையலில் கீரைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, வெங்காயம், தக்காளியைக் குறைவான அளவு பயன்படுத்துவது நல்லது.
ராஜகுமாரி