பாகற்காய் துவையல்
என்னென்ன தேவை?
பாகற்காய் - 1 (பெரிது)
புளி - நெல்லிக்காய் அளவு
கடலை பருப்பு - அரை மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - கைப்பிடி அளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாகற்காயை விதை நீக்கி பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். கறிவேப்பிலையைத் தனியாக வதக்கி எடுக்கவும். ஆறியதும் வறுத்த பருப்பு, மிளகாயை மிக்ஸியில் பொடி செய்து எடுக்கவும். வதக்கிய பாகற்காய், கறிவேப்பிலை, புளி, உப்பு ஆகியவற்றை சிறிது நீர் தெளித்து நைசாக மிக்ஸியில் அரைக்கவும். கடைசியாகப் பொடித்த பருப்பு, மிளகாயைச் சேர்த்து அரைக்கவும். கறிவேப்பிலை சேர்ப்பதால் கசப்பு அதிகம் தெரியாது. காரம், புளிப்பு, சிறிது கசப்புடன் சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். சாப்பாத்திக்கும், தோசைக்கும் தொட்டுக்கொள்ள அருமையான சைட் டிஷ் இது.
என். உஷா