சமையலறை

தெவிட்டாத தொக்கு

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பிஞ்சு கத்தரிக்காய் - 200 கிராம்

புளிக் கரைசல் - 2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்

பெருங்காயம், கடுகு - தலா 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 150 கிராம்

வெந்தயப் பொடி - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய கத்தரிக்காய்த் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகாய்த் தூள், புளிக் கரைசல் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கி, நிறம் மாறியதும் இறக்கிவைத்து, வெந்தயப் பொடி தூவிப் பரிமாறவும். விரும்பினால் சிறிதளவு பூண்டை நசுக்கிச் சேர்த்து வதக்கலாம். இனிப்புச் சுவை விரும்புகிறவர்கள், சிறு கட்டி வெல்லத்தைச் சேர்க்கலாம்.

லக்ஷ்மி சீனிவாசன்

SCROLL FOR NEXT