என்னென்ன தேவை?
சோள அரிசி - 1 கப்
நிலக்கடலை - 2 கப்
எப்படிச் செய்வது?
சோள அரிசி, நிலக்கடலை இரண்டையும் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் நீரை வடித்துவிட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, 3 விசில் விட்டு எடுத்தால் சூடான நிலக்கடலை சோள அரிசி சாதம் தயார்.
பெரம்பலூர் நாட்டு சோளத்துக்குத் தனி ருசி உண்டு. சோளத்துக்குப் பதிலாக, சாம அரிசி மற்றும் வரகு சேர்த்தும் செய்யலாம். நீரிழிவு, ஆஸ்துமா பாதிப்புள்ளவர்களுக்கு மதிய உணவாகத் தரலாம்.
இயற்கை ஆர்வலர் மல்லிகேஸ்வரி