சமையலறை

செட்டிநாட்டு சமையல்: வெண்டை மொச்சை மண்டி

ப்ரதிமா

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் - அரை கிலோ

தக்காளி - 150 கிராம்

சின்ன வெங்காயம் - 3

காய்ந்த மிளகாய் - 3

பச்சை மிளகாய் - 4

பூண்டு - 3 பல்

மொச்சைப் பயறு - 50 கிராம்

புளி - எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மொச்சைப் பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் போட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். வெண்டைக்காய் பாதியளவு வெந்ததும் மொச்சைப் பயறைச் சேர்த்து கொதித்ததும் இறக்கவும். கிட்டத்தட்ட 4 அல்லது 5 மணி நேரம் கழித்துப் பரிமாறினால் சுவை அற்புதமாக இருக்கும்.

காரைக்குடி அன்னலட்சுமி உணவக உரிமையாளர் லட்சுமி

SCROLL FOR NEXT