சமையலறை

செட்டிநாட்டு சமையல்: கும்மாயம்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

கருப்பட்டி - கால் கிலோ

நெய் - முக்கால் லிட்டர்

நெய் - 200 கிராம்

வெல்லம் - 75 கிராம்

கும்மாய மாவு செய்ய

உளுந்து - 200 கிராம்

பச்சரிசி - 75 கிராம்

பாசிப் பருப்பு - 50 கிராம்

எப்படிச் செய்வது?

கும்மாய மாவு செய்யக் கொடுத்துள்ள பொருட்களைத் தனித்தனியாக வறுத்து, மாவாகப் பொடிக்கவும். 150 கிராம் நெய்யில் கும்மாய மாவை வறுக்கவும். கருப்பட்டி, வெல்லம் இரண்டையும் முக்கால் லிட்டர் தண்ணீரில் கரைத்துச் சூடேற்றவும். வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடவும். பாகு பதம் வந்ததும் வறுத்து வைத்திருக்கும் மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். மீதியிருக்கும் நெய்யைச் சேர்த்துக் கிளறி, இறக்கிவைக்கவும். சூடாகப் பரிமாறவும்.

காரைக்குடி அன்னலட்சுமி உணவக உரிமையாளர் லட்சுமி

SCROLL FOR NEXT