நாளொரு பண்டிகையும் பொழுதொரு கொண்டாட்டமுமாக இருந்தாலும் பொங்கல் பண்டிகை தனித்துவமிக்கது. நம் வாழ்க்கை முறையுடன் நெருங்கிய தொடர்புடையது. நம் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றுவது. நம்மை உயிர் வாழவைக்கும் உழவுக்கும் அதற்கு உதவும் பகலவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் இந்தத் திருநாளின் மாண்பு, அன்று சமைக்கப்படும் உணவு வகைகளிலும் பிரதிபலிக்கும்.
“வழக்கமாகச் செய்யும் பாரம்பரிய உணவு வகைகளில் புதுமையைப் புகுத்தினால் பொங்கல் கொண்டாட்டம் இரு மடங்காகிவிடும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். அதற்கு உதவியாகச் சில உணவு வகைகளின் செய்முறைகளையும் அவர் தருகிறார்.
வரகரசி பால் பொங்கல் என்னென்ன தேவை?
வரகரசி - 1 கப்
பாசிப் பருப்பு - அரை கப்
வெல்லம் - கால் கிலோ
பால் - 3 கப்
முந்திரிப் பருப்பு, திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி - தலா 1 சிட்டிகை
தேங்காய்த் துருவல் - அரை கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பாசிப் பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும். வெல்லத்தில் சிறிது நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் பால் ஊற்றிக் கொதித்ததும் வரகரசி, பாசிப் பருப்பு இவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஊற்றி குழைய வேகவிடவும். அடுப்பைக் குறைந்த தணலில் வைத்து, வெல்லப் பாகைச் சேர்க்கவும். நெய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். முந்திரி, திராட்சை, ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி ஆகியவற்றை நெய்யில் வறுத்துச் சேர்த்து இறக்கிவைக்கவும்.