சமையலறை

முட்டை சுர்கா

சுலைஹா பீவி

என்னென்ன தேவை?

வறுத்த பச்சரிசி மாவு - 200 கிராம்

முட்டை - 1

சின்னவெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பச்சரிசி மாவில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இவற்றைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும். பணியாரச் சட்டியின் குழிகளில் எண்ணெய் ஊற்றி, கரைத்து வைத்திருக்கும் மாவை அதில் ஊற்றவும். பாதியளவு வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

சுலைஹா பீவி

SCROLL FOR NEXT