சமையலறை

தலைவாழை: முளைக்கீரை தயிர் மசியல்

ப்ரதிமா

முளைக்கீரை தயிர் மசியல்

என்னென்ன தேவை?

முளைக்கீரை (பொடியாக நறுக்கியது) – 2 கப்

தேங்காய்த் துருவல் – அரை கப்

சீரகம் – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 4

தயிர் – 1 கப்

உப்பு – தேவைக்கு

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் முளைக் கீரையைப் போட்டு வேகவிடுங்கள். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்து, கீரைக் கலவையில் சேருங்கள். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கீரை கெட்டியானவுடன் இறக்கி, தயிர் சேர்த்துக் கலக்கிப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT