சமையலறை

தலைவாழை: பொன்னாங்கன்னி உசிலி

ப்ரதிமா

பொன்னாங்கன்னி உசிலி

என்னென்ன தேவை?

பொன்னாங்கன்னி (கீரை பொடியாக நறுக்கியது) - 2 கப்

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு – தலா 1 கப்

மிளகாய் வற்றல் – 8

உப்பு, எண்ணெய் – தேவைக்கு

கடுகு, பெருங்காயம் – தலா 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் ஊறவையுங்கள். நன்றாக ஊறியதும் அவற்றுடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பருப்பு விழுதை இட்லித் தட்டில் போட்டு வேகவிட்டு எடுத்து, ஆறியதும் உதிர்த்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொன்னாங்கன்னி கீரையைப் போட்டுச் சிறிது தண்ணீர் தெளித்துப் புரட்டியெடுத்துக்கொள்ளுங்கள். கீரை வெந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையைச் சேர்த்து நன்கு வதக்குங்கள் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கிவிடுங்கள்.

SCROLL FOR NEXT