அரைக்கீரை போண்டா
என்னென்ன தேவை?
அரைக்கீரை (பொடியாக நறுக்கியது) – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
தேங்காய் (பல்லு பல்லாகக் கீறியது) - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி – சிறு துண்டு
எண்ணெய், உப்பு – தேவைக்கு
உளுத்தம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 4 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் நன்றாக ஊறவைத்து அவற்றுடன் இஞ்சி, மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். கீரையைச் சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டுப் பிழிந்து அரைத்து வைத்துள்ள மாவில் போட்டு கலந்துகொள்ளுங்கள்.
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய்ப் பல், நறுக்கிய மல்லித்தழை, உப்பு ஆகியவற்றை வடை மாவில் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மாவைப் உருட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள்.