சமையலறை

சம்பா கோதுமை அடை

ப்ரதிமா

என்னென்ன தேவை?

சம்பா கோதுமை-1 கப்

கடலை மாவு-ஒரு டேபிள் ஸ்பூன்

கீரை-அரைக் கட்டு

பெரிய வெங்காயம்-1

எண்ணெய், உப்பு-தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சம்பா கோதுமையை மிக்ஸியில் போட்டுப் பொடித்துக்கொள்ளவும். கீரையைப் பொடியாக நறுக்கி, வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். அதை ரவையுடன் கலக்கவும். இதனுடன் கடலை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்துத் தண்ணீர் ஊற்றித் தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். மாவைச் சிறு சிறு அடைகளாக வார்க்கவும்.

சாய்சுதா

SCROLL FOR NEXT