சமையலறை

குதிரைவாலிப் பணியாரம்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி-1 கப்

குதிரைவாலி-அரை கப்

முழு உளுந்து-கால் கப்

வெந்தயம்-அரை டீஸ்பூன்

கேரட்-1

வெங்காயம்-2

பச்சை மிளகாய்-3

பச்சைப் பட்டாணி-2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசி வகைகள், உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊறவைக்கவும். உப்பு போட்டு கரைத்துப் புளிக்கவைக்கவும். மறுநாள் காலை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், நன்றாக ஊறிய பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இந்தக் கலவையை மாவுடன் கலந்து, பணியாரச் சட்டியின் குழிகளில் ஊற்றவும். மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கவும். காரச் சட்னி அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறலாம்.

சாய்சுதா

SCROLL FOR NEXT