சமையலறை

பீர்க்கங்காய் பக்கோடா

ப்ரதிமா

என்னென்ன தேவை?

கடலை மாவு - 1 கப்

பீர்க்கங்காய் - 1

பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை

பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1

ஒன்றிரண்டாகப் பொடித்த முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பீர்க்கங்காயைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய பீர்க்கங்காய்த் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். கடலை மாவுடன் உப்பு, மிளகாய் விழுது, நறுக்கிய வெங்காயம், உடைத்த முந்திரி, நறுக்கிய மல்லித்தழை, பேக்கிங் பவுடர் ஆகியவற்றைக் கலந்து வதக்கிய பீர்க்கங்காய் துண்டுகளைச் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சுதா செல்வகுமார்

SCROLL FOR NEXT