சமையலறை

இட்லி மஞ்சுரியன்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

இட்லி - 4

வெங்காயம் - 1

பச்சை குடைமிளகாய் - 1 சிறியது

மைதா - 2 டீஸ்பூன்

சோள மாவு - 2 டீஸ்பூன்

சர்க்கரை - அரை டீஸ்பூன்

சோயா சாஸ், தக்காளி சாஸ் - தலா 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

வெங்காயத் தாள், கொத்தமல்லி -சிறிதளவு

இஞ்சி, பூண்டு - சிறிதளவு

எப்படிச் செய்வது?

நன்கு ஆறிய இட்லியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு,சிறிது மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துவையுங்கள். இட்லித் துண்டுகளை இந்த மாவுக் கரைசலில் முக்கியெடுத்துச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்குங்கள். அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி. சிறிதளவு சர்க்கரை, உப்பு சேருங்கள். பிறகு குடைமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்குங்கள். குடைமிளகாய் வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும் பொரித்துவைத்துள்ள இட்லித் துண்டுகளை அதில் போட்டுக் கிளறுங்கள். அதன் மீது வெங்காயத் தாள், கொத்தமல்லி தூவிப் பரிமாறுங்கள். சூடாகவும் சாப்பிடலாம். மதிய உணவுக்கும் கொடுத்தனுப்பலாம்.

SCROLL FOR NEXT