சமையலறை

சப்பாத்தி காளான் பொடிமாஸ்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

சப்பாத்தி - 2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

மிளகாய்த் தூள் - சிறிதளவு

காளான் - 100 கிராம்

எப்படிச் செய்வது?

சப்பாத்தியைப் பொடியாக அறிந்துவையுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு போட்டுத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கல். அதில் சிறிதளவு உப்பு, பொடியாக நறுக்கிய காளான் போட்டு வதக்குங்கள். காளான் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிவைத்திருக்கும் சப்பாத்தியை அதில் போட்டு நன்றாகக் கிளறுங்கள். அடுப்பை சிறு தீயில் வைத்து, நன்றாகச் சூடானதும் கொத்தமல்லி தூவி இறக்கிவையுங்கல்.

SCROLL FOR NEXT