என்னென்ன தேவை ?
பலாக் கொட்டை - 20
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 2
இஞ்சித் துருவல் - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
பலாக் கொட்டையை வேகவிட்டு எடுத்து ஆறியதும் மிக்ஸியில் பவுடராக அரையுங்கள். அரைத்தப் பொடியுடன் கடலை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்த மாவை உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுங்கள்.
- வரலட்சுமி முத்துசாமி