சமையலறை

தினை மாவிளக்கு

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தினை மாவு - 1 கப்

துருவிய வெல்லம் - அரை கப்

தேங்காய் - அரை மூடி

முந்திரி - 6 (நறுக்கியது)

நெய் - 3 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

தினையைச் சுத்தம் செய்து அரை மணிநேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்துங்கள். பிறகு மாவாக அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேங்காய்ப் பல், முந்திரி இரண்டையும் நெய்யில் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். மாவு, வெல்லம், தேங்காய்ப் பல், முந்திரி இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்தால் மாவு கெட்டியாகும். இதை ஒரு பாத்திரத்தில் வைத்து, நடுவில் குழியாக்கி நெய்விட்டு தீபம் ஏற்றலாம்.

SCROLL FOR NEXT