சமையலறை

கற்றாழை பருப்புப் பாயசம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு - அரை கப்

துருவிய வெல்லம் - 1 கப்

காய்ச்சிய பால் - ஒன்றரை கப்

கற்றாழை - ஒரு மடல்

முந்திரி, பாதாம் - தலா 6 (நறுக்கியது)

ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை

நெய் - 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கற்றாழையைத் தோல் சீவி பல முறை அலசி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பாதாம், முந்திரியை நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். பாசிப் பருப்பை வறுத்து, குக்கரில் குழைய வேகவைத்து, மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் காய்ச்சிய பாலைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். பிறகு அதனுடன் வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரைந்ததும் கற்றாழையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடுங்கள். பாதாம், முந்திரி சேர்த்து இறக்கினால் சுவையான கற்றாழை பருப்புப் பயாசம் தயார்

SCROLL FOR NEXT