என்னென்ன தேவை ?
சேனை - கால் கிலோ
புழுங்கல் அரிசி - 2 கப்
பொட்டுக் கடலை மாவு - 1 கப்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிது
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது ?
சேனையைத் தோலுரித்துத் துண்டுகளாக்கிக் குழைய வேகவையுங்கள். புழுங்கல் அரிசியை ஊறைவைத்து நைசாக அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் பொட்டுக் கடலை மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயம், சேனை விழுது, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பிசைந்த மாவை ரிப்பன் அச்சில் போட்டுப் பிழிந்தெடுங்கள். சேனைக்கிழங்கைப் பார்த்தாலே வெறுத்து ஓடுகிற குழந்தைகள்கூட இந்த முறுக்கை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
- வரலட்சுமி முத்துசாமி