சமையலறை

புத்தாண்டு புது விருந்து: பச்சைப் பயறு வடை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பச்சைப் பயறு - 1 கப்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறு துண்டு

சோம்பு - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1

புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு, எண்ணெய்

- தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பச்சைப் பயிறை முதல் நாளே ஊறவைத்து, முளைகட்டவிடுங்கள். வெங்காயத்தைப் பொடியாக அரிந்துகொள்ளுங்கள். முளைகட்டிய பயறு, மிளகாய், சோம்பு, இஞ்சி, மல்லி, புதினா இவற்றை ஒன்றாகச் சேர்த்து சற்றுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் தேவையான உப்பு, வெங்காயம் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். இந்தக் கலவையைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.


விசாலா ராஜன்

SCROLL FOR NEXT