சமையலறை

பல்சுவை புடலை: துக்கடா

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

இளசான புடலங்காய் - 2

கடலை மாவு, அரிசி மாவு - தலா 1 கப்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்

சமையல் சோடா - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

புடலங்காயை பஜ்ஜி போடுவதற்கு ஏற்ற மாதிரி நறுக்கிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயத் தூள், சமையல் சோடா ஆகியவற்றைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள். வெட்டிவைத்துள்ள புடலங்காயை, கரைத்துவைத்திருக்கும் மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.


வரலட்சுமி முத்துசாமி

SCROLL FOR NEXT