என்னென்ன தேவை?
கடலை மாவு - அரை கப்
அரிசி மாவு - கால் கப்
ஏதாவது ஒரு கீரை (பொடியாக நறுக்கியது) - அரை கப்
பனீர் துருவல் - கால் கப்
மிளகுத் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிவைத்திருக்கும் கீரையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, இறக்கிவையுங்கள். கீரை நன்றாக ஆறியதும் அதில் உப்பு, பனீர், மிளகுத் தூள் சேர்த்து உருண்டைகளாகப் பிடியுங்கள். கடலை மாவுடன் அரிசி மாவைக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். இந்த மாவில் கீரை உருண்டைகளைத் தோய்தெடுத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
- மேகலா