என்னென்ன தேவை?
பச்சைப் பயறு, துருவிய வெல்லம் - தலா ஒரு கப்
எள் - ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
மேல் மாவுக்கு:
அரிசி மாவு - ஒரு கப்
மைதா மாவு - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பச்சைப் பயறை நன்றாக வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் பொடித்துக்கொள்ளுங்கள். எள்ளையும் தேங்காய்த் துருவலையும் லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது நீர்விட்டு அதில் வெல்லத்தைப் போட்டுக் கரையவிடுங்கள். ஒரு பாத்திரத்தில் பயறு மாவு, எள், தேங்காய்த் துருவல், ஏலப்பொடி எல்லாவற்றையும் கலந்து வெல்லக் கரைசலைச் சிறிது சிறிதாக ஊற்றிப் பிசையுங்கள். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். மேல் மாவுக்கு எனக் கொடுத்துள்ள பொருட்களை தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளுங்கள். இதில் மூன்று மூன்று உருண்டைகளாகத் தோய்த்தெடுத்து, சூடான எண்ணையில் போட்டுப் பொரித்தெடுங்கள்.