சமையலறை

சுரைக்காய்த் தோல் கீர்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய சுரைக்காய்த் தோல் – முக்கால் கப்

காய்ச்சிய பால் – ஒன்றரை கப்

சர்க்கரை – அரை கப்

நெய் – தேவையான அளவு

முந்திரி, திராட்சை – சிறிதளவு

ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்

சுண்டச் செய்யப்பட்ட பால் – 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

சுரைக்காய்த் தோலை நெய் விட்டு நன்றாக வதக்குங்கள். பிறகு அதில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து வேகவையுங்கள். அதனுடன் காய்ச்சிய பால், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்து நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, சுண்டச் செய்யப்பட்ட பால், குங்குமப் பூ சேர்த்து இறக்கிவையுங்கள்.

காயில் உள்ள சத்து, தோலிலும் இருக்கும். அதனால் தோலை வீணாக்காமல் இப்படி கீர் செய்து சாப்பிடலாம். சுரைக்காய்த் துருவலிலும் இதைச் செய்யலாம்.

SCROLL FOR NEXT