சமையலறை

சிறுதானிய குழல்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

குதிரைவாலி அரிசி ரவை 2 கப்

காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் 4

தேங்காய்த் துருவல் ஒரு கப்

கடுகு, கடலைப் பருப்பு, உளுந்து தலா அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுந்து போட்டுத் தாளியுங்கள். அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். தளதளவென்று கொதிக்கும்போது அரிசி ரவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறி இறக்கிவையுங்கள்.

ஆறியதும் நீளமான ரோல்களாக செய்து இட்லி தட்டில் ஆவியில் வேகவையுங்கள்.

SCROLL FOR NEXT