சமையலறை

நாவூறும் நெல்லைச் சுவை: அரைத்துவிட்ட குழம்பு

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

மிளகாய் வற்றல் - 8

வெந்தயம் - 2 டீஸ்பூன்

பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்

உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 1 கப்

வெண்டைக்காய் - 4

வெள்ளரிக்காய் - 5 துண்டு

புளி – சிறிதளவு

மோர் - 1 கப்

மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மிளகாய் வற்றல், வெந்தயம், பச்சரிசி, உளுந்து இவற்றை நன்றாக வறுத்து, பொடித்துக்கொள்ளுங்கள். பின்னர் புளியைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து அதில் வெண்டைக்காய், வெள்ளரிக்காய், மஞ்சள், உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். வறுத்தப் பொடியுடன் தேங்காயைச் சேர்த்து அரைத்து, மோரில் கரைத்து, குழம்பில் ஊற்றுங்கள். ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவையுங்கள். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து, குழம்பில் சேர்த்துப் பரிமாறுங்கள்.


கமலா மூர்த்தி

SCROLL FOR NEXT