சமையலறை

முக்கனி விருந்து: பலாக்கொட்டை பொரியல்

செய்திப்பிரிவு

சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில் விளையும் ராஜ கனியான மாம்பழம் பலருக்கும் பிடிக்கும். மாம்பழத்துடன் போட்டி போட்டுக்கொண்டு பலாப்பழமும் மணம் பரப்பும். இவற்றுடன் எந்தக் காலத்திலும் விளையும் வாழைப்பழமும் சேர்ந்தால் சுவைக்குப் பஞ்சமிருக்காது. “இந்த முக்கனிகள் நம் உணவுப் பழக்கத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. பழங்களை அப்படியே சாப்பிட்டாலே அமிர்தமாக இருக்கும். இந்த அமிர்தக் கனிகளைச் சமைத்தும் சாப்பிடலாம்” என்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். பழங்களில் இத்தனை வகை சுவையா என ஆச்சரியப்படவைக்கும் இவர், அவற்றில் சில பதார்த்தங்களைச் சமைக்கக் கற்றுத்தருகிறார்.

பலாக்கொட்டை பொரியல்

என்னென்ன தேவை?

வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20

வேகவைத்த கடலைப் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை

தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுந்து - தலா ஒரு டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

எப்படிச் செய்வது?

பலாக்கொட்டையை வேகவைத்து, தோல் நீக்குங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, மிளகாய்,கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். அதில் பலாக்கொட்டை, கடலைப் பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கிளறுங்கள். சிறிது நேரம் கழித்து தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகப் புரட்டியெடுத்தால் பொரியல் தயார்.


லட்சுமி சீனிவாசன்

SCROLL FOR NEXT