என்னென்ன தேவை?
பாலக் கீரை - 1 கட்டு
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கடலை மாவு - முக்கால் கப்
பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு - தலா கால் கப்
மிளகாய்த்தூள், சோம்பு - தலா 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - கால் கப்
உருளைக்கிழங்கு - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாலக் கீரையை அலசி, ஆய்ந்து, நறுக்கிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை அரை வேக்காடு வேகவைத்து, தோல் உரித்து, மசித்துக் கொள்ளவும். கடலை மாவுடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள், நறுக்கிய பாலக்கீரை, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசையவும். சூடான எண்ணெயில் இந்தக் கலவையை உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
சுதா செல்வகுமார்