என்னென்ன தேவை?
கோதுமை ரவை - ஒரு கப்
புளித்த தயிர் - அரை கப்
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
உலர் பழங்கள் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் அல்லது
நெய் - 4 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
கோதுமை மாவை மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் சுற்றியெடுங்கள். அதனுடன் புளித்த தயிர், பேக்கிங் சோடா, உப்பு, உலர் பழங்கள் ஆகியவற்றைக் கலந்து ஒரு மணி நேரம் மூடிவையுங்கள். எண்ணெய் அல்லது நெய் தடவிய தட்டில் இந்தக் கலவையைப் போட்டு ஆவியில் வேகவையுங்கள். ஆறியதும் துண்டுகள் போட்டால் அருமையான உலர் பழ கேக் தயார்.
- சீதா சம்பத்