சமையலறை

கொண்டைக்கடலை மசாலா

ப்ரதிமா

என்னென்ன வேண்டும்?

கொண்டைக்கடலை - அரை கப்

பச்சை மிளகாய்- 2

வெங்காயம், தக்காளி – தலா 2

இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்

மல்லித் தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

முந்திரி - 4

தேங்காய்ப் பால் - கால் கப்

எப்படிச் செய்வது?

கொண்டைக்கடலையை வெந்நீர் ஊற்றி அரைமணி முதல் ஒரு மணி நேரம்வரை ஊறவையுங்கள். நன்றாக ஊறியதும் உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து, முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியைச் சேர்த்து மீண்டும் வதக்குங்கள். அத்துடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கி, வேகவைத்த கடலையைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள்.

கலவை நன்றாக வெந்து, ஒன்று சேர்ந்து வந்ததும் தேங்காய்ப் பால் ஊற்றி ஓரிரு கொதி வந்ததும் இறக்கிவையுங்கள். இது தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. கொண்டைக்கடலையை வெந்நீர் நிரம்பிய ஹாட்பேக்கில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.

SCROLL FOR NEXT