என்னென்ன தேவை?
வரகரிசி ஒரு கப்
உளுந்து 4 டீஸ்பூன்
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 4 பல்
பச்சை மிளகாய் 2
காய்ந்த மிளகாய் 3
முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வரகரிசி, உளுந்தைச் சுத்தம் செய்து அரை மணிநேரம் ஊறவையுங்கள். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து, கெட்டியாக அரையுங்கள். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரையுங்கள். இதை அரைத்த மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள். முருங்கைக் கீரை, உப்பு சேர்த்துப் பிசையுங்கள். பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். விரும்பினால் சின்ன வெங்கா யத்தைப் பொடியாக நறுக்கி, வடை மாவுடன் கலக்கலாம்.